மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என்ற செய்தி வதந்தி...: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

அகமத் நகர்: மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் மூடப்படும் என்ற தகவல் வதந்தி. மகாராஷ்டிராவின் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள புகர்பெற்ற ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையின்றி மூடப்படும் என்ற தகவல் வதந்தி என்று கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறிய கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதாவது சாய் பாபாவின் பிறப்பிடம் குறித்து எந்த ஆவணமும் கிடைக்கவில்லை. ஷீரடியில் தங்கியிருந்த காலத்தில் சாய் பாபாவே தனது பிறப்பிடம் அல்லது மதம் குறித்த எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என அவர் தெரிவித்து இருந்தார். மேலும் பர்பானியில் ரூ.100 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.

இந்நிலையில் சாய் பாபாவின் பிறப்பிடம் பாத்ரி என்று உத்தவ் தாக்கரே கூறியதை எதிர்த்து மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலை காலவரையின்றி மூட அக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது தகவல் வெளியானது. ஆனால் புகர்பெற்ற ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் மூடப்படும் என்ற தகவல் வதந்தி என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: