2 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்திற்கு திரும்பிய சானியா; முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

ஹோபர்ட்: ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. மகளிர் பிரிவு இறுதிப்போட்டியில் சீனாவின் சாங் சுவாய் - பெங்க் சுவாயை 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்திற்கு திரும்பிய சானியா முதல் தொடரிலேயே பட்டம் வென்றுள்ளார். இந்திய டென்னிஸ் புயல் சானியா மிர்சா(33) 2017ம் ஆண்டு நடைபெற்ற சீன ஓபன் போட்டிக்கு பிறகு ஓய்வில் இருந்தார். இந்நிலையில் 2020 ஜனவரியில் நடைபெறும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும் சனியா களம் இறங்கினார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஹோபர்ட் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில்  இந்தியாவின் சானியா மிர்சா,  உக்ரைன் வீராங்கனை நடியா கிச்சனோக்குடன் இணைந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற அரை இறுதியில் செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா - தாமரா ஜிடான்செக் (ஸ்லோவேனியா) ஜோடியுடன் நேற்று மோதிய சானியா ஜோடி 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 24 நிமிடத்துக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீனாவின் சாங் சுவாய் - பெங்க் சுவாயை 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றது.

Tags : Sania Mirza ,Won ,Ukraine ,Nadia Couple ,Tennis Tournament , Hobart International Tennis, Tennis Tournament, Sania Mirza, Ukraine Nadia Couple, Mixed Doubles
× RELATED ஜிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி