ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான்களுக்கு 2 மாதத்திற்குள் தடைவிதிக்க வேண்டும்; மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான்களுக்கு 2 மாதத்திற்குள் தடைவிதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதை அமல்படுத்த 4 மாதம் தேவைப்படுகிறது என மத்திய அமைச்சகம் அவகாசம் கோரியுள்ளது. ஆழ்குழாய் மூலம் பெறப்படும் நிலத்தடி நீரை சுத்திகரிக்க ஆர்ஓ முறையை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான் தொடர்பான ஆய்வு முடிவுகள் குறித்து நிபுணர்கள் குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் 1 லிட்டர் குடிநீரில் கரைந்துள்ள திடப்பொருளின் மொத்த அளவு 500 மில்லி கிராமுக்கும் குறைவாக இருக்கும் வகையில் குடிநீரை சுத்திகரிக்கும் ஆர்ஓ இயந்திரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த வகை ஆர்ஓ முறையால் பெறப்படும் குடிநீர் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிக்கும் என்பது நிபுணர் குழுவின் எச்சரிக்கை. எனவே இடை தடை செய்ய வேண்டும் என்றும், இந்த உத்தரவை விரைவாக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து 2 மாதங்களுக்குள் தடை செய்வது தொடர்பாக அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையை செயல்படுத்த 4 மாத அவகாசம் தேவைப்படுகிறது என்று மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் என கோரியுள்ளது.

இதுதொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்துள்ளஆவணத்தில் கூறும்போது, “சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அறிவிப்பாணையை வெளியிட்டு அதை செயல்படுத்த சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. அனைவருக்கும் தெரியப்படுத்தி, கருத்துகள், ஆலோசனைகளைக் கேட்க 2 மாத கால அவகாசம் போதுமானதாக இருக்காது. மேலும் சட்டம் மற்றும் நீதித்துறையிடமிருந்து ஒப்புதலைப் பெறவேண்டும். எனவே, 4 மாத அவகாசம் இருந்தால் இந்த உத்தரவுகளை செயல்படுத்த முடியும்.

Tags : RO ,National Green Tribunal ,Federal Government , RO Water, RO Water Purifier, Federal Government, National Green Tribunal, RO ban sanitizer
× RELATED டெல்லியில் மீண்டும் வன்முறை...