ஈரோடு, மணப்பாறை, புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்; அடங்க மறுக்கும் காளைகள்... பிடிக்க துடிக்கும் இளம் காளையர்கள்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் 2-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 300 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கும், வெற்றி பெறக்கூடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பொங்கல் விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு ஜன. 15ல் மதுரை அவனியாபுரத்திலும், இரண்டாவதாக மாட்டுப்பொங்கல் தினத்தில் மதுரை பாலமேட்டிலும் அடுத்தடுத்து நடந்தன. இதனைத்தொடர்ந்து, காணும் பொங்கல் தினமான நேற்று, உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்தது.

16 காளைகளை அடக்கி: சிறந்த மாடுபிடி வீரராக அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித் தேர்வானார். இவர் 16 காளைகளை அடக்கி முதல் பரிசாக ரூ.6 லட்சம் மதிப்புள்ள காரை வென்றார். கடைசி 9வது சுற்றில் களமிறங்கிய ரஞ்சித், ஒரு மணிநேரத்தில் 16 காளைகளை அடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த காளைக்கான பரிசு, குலமங்கலத்தைச் சேர்ந்த மதிமுக மாவட்ட செயலாளரான மாரநாடு என்பவரது காளை வென்றது. இவருக்கு கார் மற்றும் மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 4 கறவை பசு மாடுகள் வழங்கப்பட்டன.

மாடு முட்டியதில் ஒருவர் படுகாயம்

ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடக்கம்

புதுக்கோட்டை அருகே வடமலாப்பூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் 610 காளைகள், 275 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொத்தமேடுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் 650 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Tags : bullocks ,Erode ,Manapparai ,Pudukkottai ,Bulls , Erode, Manapparai, Pudukkottai, Jallikattu, Bulls, Cattlemen
× RELATED ஜல்லிக்கட்டிற்கு டோக்கன் மறுப்பு...