இந்திய தூதரகத்தில் இலவச பயிற்சி 9 லட்சம் அமெரிக்கர்கள் இந்தியில் பேசி அசத்தல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய தூதரகம்  அளிக்கும் பயிற்சியால், இந்நாட்டில் தற்போது 9 லட்சம் அமெரிக்கர்கள், வெளிநாட்டினர் சரளமாக இந்தி பேச கற்றுள்ளனர். அமெரிக்காவில் அமைந்துள்ள இந்திய தூதகரத்தின் சார்பில் இலவச இந்தி கற்பித்தல் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஏராளமான அமெரிக்கர்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டு இந்தி பயில்கின்றனர். இந்திய தூதரகத்தில் நேற்று விஸ்வ இந்தி திவாஸ் கொண்டாட்டம் நடந்தது.

இதில்,  இந்திய தூதரக பொறுப்பாளர் அமித் குமார் பேசுகையில், “அமெரிக்காவில் பல்வேறு பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. இந்திய தூதரகம் சார்பாகவும் அமெரிக்கர்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு இலவச இந்தி பயிற்சி வகுப்பு நடத்தப்ப்டுகிறது. அமெரிக்க சமூக ஆய்வு கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் தற்போது 9 லட்சம் பேர் இந்தி பேசுகின்றனர். சுற்றுலா, தொழில் மற்றும் இதர காரணங்களுக்காக இந்தியா வருவோர் இந்தி கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். . கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய தூதரகம் இந்தி வகுப்புக்களை நடத்தி வருகிறது,” என்றார்.

Related Stories: