×

ஆந்திராவின் தலைநகர் எது? 20ம் தேதி அறிவிக்க முடிவு

திருமலை: ‘ஆந்திர தலைநகர் எங்கிருந்து செயல்படும் என்று 20ம் தேதி துவங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்படும்,’ என்று அமைச்சர் போச்சா சத்தியநாராயணா தெரிவித்தார். ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தாடேபல்லியில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் தலைநகர் குறித்து அமைக்கப்பட்ட உயர்மட்ட கமிட்டியினருடன் நேற்று முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர், நகராட்சிகள் துறை அமைச்சர் போச்சா சத்தியநாராயணா நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநில புதிய தலைநகர் குறித்து ஜி.என்.ராவ், பிசிஜி கமிட்டி அறிக்கை பரிசீலிக்கப்பட்டதோடு சுதந்திரம் வந்த பிறகு ஒருங்கிணைந்த ஆந்திராவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டது.

அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்தும் துல்லியமாக பரிசீலிக்கப்பட்டது. அமராவதி தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் கோரிக்கைகளும் விவாதிக்கப்பட்டது. தலைநகர் எங்கிருந்து செயல்படும்? எப்போது செயல்படும்? என்பது குறித்து 20ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் தெரிவிக்கப்படும். விவசாயிகளின் கருத்துக்களை கேட்பதற்காக சிஆர்டிஏ ஆணையாளருக்கு இமெயில் மூலமாகவும் எழுத்து பூர்வமாகவும் தகவல்  தெரிவிக்கலாம் என அரசு தெரிவித்திருந்தது. அமராவதியில் தற்போது 25 சதவீதத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் கட்டாயம் கட்டி முடிக்கப்படும். மேலும், சட்டப்பேரவை இங்கேயே இருக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவை  தலைநகராக இருக்க வேண்டுமென்று கமிட்டியும் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இது குறித்து சட்டப்பேரவை விவாதத்துக்கு பிறகு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : capital ,Andhra Pradesh , capital of Andhra Pradesh? Decided ,o announce, on the 20th
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி