டெல்லி தேர்தல் பாஜ முதல் கட்ட பட்டியல் வெளியீடு

புதுடெல்லி:  டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், போட்டியிடுவதற்கான 70 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை ஆளும் கட்சியான ஆம் ஆத்மி ஏற்கனவே வெளியிட்டுவிட்டது. இந்நிலையில், 57 வேட்பாளர்களின் பெயர்கள் அ டங்கிய முதல் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. இதில், டெல்லி பாஜ தலைவர் மனோஜ் திவாரி, முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ கபில் மிஸ்ரா பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால், முதல்வர் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் பெயரை பாஜ இன்னும் அறிவிக்கவில்லை.

Related Stories: