சிறுமுகை வனப்பகுதியில் யானை தாக்கி காவலாளி பலி

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் சிறுமுகை திம்மராயன்பாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (58). ஆலூர் மலை கிராம  தோட்ட காவலாளி. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல லிங்காபுரத்தில் இருந்து ஆலூர் கிராமத்துக்கு காவல் பணிக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை ஒன்று ராமச்சந்திரனை தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிறுமுகை வனத்துறையினர் ராமச்சந்திரனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று மதியம் ராமச்சந்திரன் உயிரிழந்தார். தொடர்ந்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Tags : Elephant attack guard ,guard , Minority, wilderness, elephant attack, guard, kills
× RELATED உதவியாளர், காவலர் பணிக்கு நேர்காணல்