திருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் அண்ணாமலையார் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று திருவூடல் திருவிழா. சுவாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஏற்படும் ஊடலை குறிப்பிடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கலன்று இவ்விழா நடத்தப்படுகிறது. அதன்படி, திருவூடல் திருவிழா நேற்று முன்தினம் வெகுசிறப்பாக நடத்தப்பட்டது. இதையடுத்து, ஊடல் காரணமாக அம்மன் அண்ணாமலையார் கோயிலுக்கும், அண்ணாமலையார் குமரக்கோயிலுக்கும் சென்றனர். அதன் தொடர்ச்சியாக, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் நேற்று அதிகாலை 5 மணியளவில்  கிரிவலம் சென்றனர். அப்போது, கிரிவலப்பாைத முழுவதும் பக்தர்கள் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், அண்ணாமலையார் கோயிலில் மறுவூடல் விழா நடந்தது.

Tags : Thiruvannamalai Unnamamulliamman ,Annamalayar Girivalam ,Thiruvannamalai ,Unnamayalliyar Annamalayar Girivalam , Thiruvannamalai, Unnamamulliamman, Annamaliyar, Girivalam
× RELATED திருவண்ணாமலையில் கரும்பு விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம்