சில்லரை தகராறில் பஸ்சில் இருந்து கண்டக்டரை தள்ளிவிட்ட வாலிபர்

சேலம்: சேலம் அரசு போக்குவரத்து கழகம் எருமாப்பாளையம் டெப்போவில் டவுன் பஸ் கண்டக்டர் மணிகண்டன்(34). நேற்று முன்தினம் இரவு பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஜங்சனுக்கு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ் 4 ரோடு பகுதியில் சென்றபோது, அதில் பயணம் செய்த அரிசிப்பாளையம் முள்ளாக்காடு பகுதியை சேர்ந்த குணசேகரன்(20) என்பவர் ரூ.10 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்டார். ரூ.2 ரூபாய் கொடுத்தால் ரூ.5 ரூபாய் தருவதாக கண்டக்டர் கூறினார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர் குணசேகரன், கண்டக்டர் மணிகண்டனை திடீரென தாக்கி பஸ்சில் இருந்து கீழே தள்ளிவிட்டார். ரோட்டில் காயத்துடன் கிடந்த கண்டக்டர் மணிகண்டனை பயணிகள் மீட்டனர். குணசேகரனை போலீசார் கைது செய்தார்.

Tags : plaintiff ,retail dispute , In retail dispute, bus, conductor, dumpster, plaintiff
× RELATED வாலிபருக்கு கத்திக்குத்து