தமிழகம் முழுவதும் 600 இடங்களில் கள் இறக்கும் போராட்டம்

ஈரோடு: தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது: கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு விலக்கி கொள்ள மறுக்கிறது. கள் போதை பொருள் அல்ல, நமது அன்றாட உணவின் ஒரு பகுதியாகும். இதை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் 2ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. முன்னதாக, வரும் 21ம் தேதி தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கும் போராட்டம் நடைபெற உள்ளது என்றார்.

Tags : places ,Tamil ,country , Throughout Tamil Nadu, 600 places, s, die, struggle
× RELATED பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு போராட்டம்