மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு: 16 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை வென்ற ரஞ்சித்குமார்

மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் 739 காளைகளும், 688 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

16 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரை சேர்ந்த ரஞ்சித் குமாருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை வென்ற ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 14 காளைகளை அடக்கிய அழகர்கோயிலைச் சேர்ந்த கார்த்திக்கு 2ம் பரிசாக பைக் வழங்கப்பட்டது. 16 காளைகளை பிடித்த அரிக்காம்பட்டியை சேர்ந்த கணேசனுக்கு 3வது பரிசாக ரூ.10,000 வழங்கப்பட்டது. முதல்பரிசு பெற்ற ரஞ்சித்துக்கு பரிசாக ரூ.7 லட்சம் மதிப்புள்ள 4 பசு மாடுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலிடம் பிடித்த ரஞ்சித்தின் சகோதரர் ராம்குமார் கடந்தாண்டு ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றவர்.

சிறந்த காளைக்கான முதல் பரிசை மதுரை குலமங்கலம் மார்நாடு காளை தட்டிச் சென்றது. 12 மதிப்பெண்கள் பெற்ற குலமங்கலம் காளை களத்தில் 53 வினாடிகள் நின்று விளையாடியது. புதுக்கோட்டை மாவட்டம் அனுராதாவின் காளை 10 மதிப்பெண்களுடன் 2ம் பரிசை வென்றது.

Tags : Madurai Alanganallur Jallikattu Competition ,Alanganallur , Alanganallur
× RELATED மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு...