அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு

மதுரை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது செல்லப்பாண்டி என்பவர் உயிரிழந்தார். அலங்காநல்லூரில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மாடு முட்டி அதன் உரிமையாளர் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்தார். மாடு முட்டி உயிரிழந்த காளை உரிமையாளர் ஸ்ரீதர் மதுரை அருகே சோழவந்தானை சேர்ந்தவர் ஆவார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டி நிறைவு பெற்றது. மஞ்சுவிரட்டில் 110 காளைகளும், 40 மாடுபிடி வீரர்கள் பெங்கேற்றனர். மாடுகள் முட்டியதில் 80 பேர் காயமடைந்தனர். பலத்த காயம் அடைந்த 15 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர், சிவகங்கை, மதுரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை அலங்காநல்லூரை தொடர்ந்து கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. குளித்தலை அருகே ராட்ச்சண்டர் திருமலையில் 850-க்கும் மேற்பட்ட காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே நந்தமாடிபட்டி ஜல்லிக்கட்டில் 500 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் சுமார் 500 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: