×

நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிடும் பிரச்னையில் டெல்லி அரசு தாமதம் செய்யவில்லை: அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்

புதுடெல்லி: நிர்பயா பலாத்கார கொலை குற்றவாளிகளை தூக்கிலிடும் பிரச்னையில் டெல்லி அரசு தாமதம் செய்யவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார். டெல்லி அரசால் தான் குற்றவாளிகளை தூக்கிலிடுவது தாமதமாவதாக கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளுக்கு கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். டெல்லி யூனியன்பிரதேச அரசு செய்ய வேண்டிய பணிகள் சில மணி நேரத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும், நிர்பயா கொலை குற்றவாளிகளை விரைந்து தூக்கிலிட வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கியெறியப்பட்டதில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவன் சிறுவன் என்பதால், 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று இப்போது வெளியில் உள்ளான். எஞ்சிய முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உறுதி செய்து இவர்களுக்கு வரும் 22ம் தேதி தண்டனையை நிறைவேற்ற வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனு அனுப்பினார். இந்த கருணை மனுவை டெல்லி துணை நிலை ஆளுநர் நிராகரித்து, அதனை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். அந்த மனுவை உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில், முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்கும்படி ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மறுசீராய்வு மனுக்கள், மரண வாரண்டடை எதிர்த்து வழக்கு, கருணை மனு என தண்டனையை தள்ளிப்போடுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதால், நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி அதிருப்தி அடைந்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஷா தேவி, இதுவரை நான் அரசியல் பேசியதில்லை. ஆனால் இப்போது சிலரை பற்றி பேச விரும்புகிறேன். 2012ல் என் மகளின் மரணத்திற்காக யாரெல்லாம் தெருக்களில் இறங்கி போராடினார்களோ, அவர்கள் எல்லாம் இப்போது எனது மகளின் மரணத்தை அரசியல் ஆதாயத்திற்கான விளையாட்டிற்காக பயன்படுத்துகிறார்கள் என்று குற்றமசாட்டியது குறிப்பிடத்தக்கது.

Tags : government ,Delhi ,murder convicts ,Arvind Kejriwal , Arvind Kejriwal
× RELATED காலாவதியான தேர்தல் பத்திரங்களைக்கூட...