பொங்கலையொட்டி கொடைக்கானல் ஏரியில் படகு போட்டி : சுற்றுலா பயணிகள் ஆர்வம்

கொடைக்கானல், ஜன. 17: பொங்கல் விழாவையொட்டி கொடைக்கானல் ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி நடத்தப்பட்டது. 2 இருக்கை மற்றும் 4 இருக்கை பெடல் படகுடன் நடத்தப்பட்ட இப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்து துவங்கி வைத்தார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் டேவி்ட் பிரபாகரன் முன்னிலை வகித்தார். சுற்றுலா வளர்ச்சி படகு குழாமின் மேலாளர் பூபாலன் வரவேற்றார். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன் தலைமை வகித்து, படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாக பரிசாக ரூ. ஆயிரமும் வழங்கப்பட்டது.

4 இருக்கை படகு போட்டியில் மதுரையை சேர்ந்த ஜார்ஜ், ஆலன், ஜென்சி, சதீஷ் குழுவினர் முதல் பரிசை பெற்றனர். 2 இருக்கை படகு போட்டியில் கொடைக்கானலை சேர்ந்த சோபியா முதல் பரிசை வென்றார்.


Tags : Boat Competition ,Pongaliyoti Kodaikanal Lake: Tourist Interests ,Pongaliyoti Kodaikanal Lake , Kodaikanal, lake, boat, competition, tourists
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி கொடைக்கானலில் படகு போட்டிகள் துவக்கம்