நிர்பயா பலாத்கார கொலை குற்றவாளிகளை தூக்கிலிடும் பிரச்சனையில் டெல்லி அரசு தாமதம் செய்யவில்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி : நிர்பயா பலாத்கார கொலை குற்றவாளிகளை தூக்கிலிடும் பிரச்சனையில் டெல்லி அரசு தாமதம் செய்யவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.டெல்லி அரசால்தான் குற்றவாளிகளை தூக்கிலிடுவது தாமதம் ஆவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளார்.டெல்லி யூனியன் பிரதேச அரசு செய்ய வேண்டிய பணிகள் சில மணி நேரத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டன என்றும் நிர்பயா கொலைக் குற்றவாளிகளை விரைந்து தூக்கிலிட வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Tags : Arvind Kejriwal ,rapists ,Nirbhaya ,Delhi , Nirbhaya, Delhi, CM, Arvind Kejriwal
× RELATED டெல்லியில் உள்துறை அமைச்சர்...