இந்தியா வருமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படும்; மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியா வருமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசு தலைவர்கள் கூட்டம் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இது பிரதமர் அளவிலான கூட்டமாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 8 உறுப்பு நாடுகள், 4 பார்வையாளர்கள் நாடுகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். குறிப்பாக பாகிஸ்தானுக்கும் அழைப்பு விடுக்கப்பட இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சீனாவின் உதவியுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் எழுப்ப முயன்றதை சுட்டிக்காட்டிய அவர், இது போன்ற நடவடிக்கையை சீனாவும், பாகிஸ்தானும் எதிர் காலத்தில் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

புல்வமா தாக்குதல், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் உறவு மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா வருமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories: