உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..

மதுரை : உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம், மதுரை மாவட்ட கலெக்டர் வினய், மாநகர காவல் ஆணையர் டேவிட்சர் தேவ ஆசிர்வாதம், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோரைக் கொண்ட ஜல்லிக்கட்டு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கோட்டை முனியசாமி கோவிலில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டில், களமிறங்குவதை மாடுபிடி வீரர்கள் தங்களின் தனி கௌரவமாகக் கருதுகின்றர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 700 காளைகள் 920 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சிறந்த மாடுபிடி வீரருக்கும், மாடுபிடி வீரர்களைத் தெறிக்கவிடும் சிறந்த காளைகளுக்கும் கார்கள் உள்பட பல பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை இந்த குழு மாற்றப்பட்டு, மற்றொரு குழு இறக்கப்படும். ஜல்லிக்கட்டை பலரும் கண்டு களிக்க வசதியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே எல்.இ.டி. டி.வி.க்களும் அமைக்கப்பட்டுள்ளன.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அலங்காநல்லூருக்கு வந்துள்ளனர். அவர்களுக்காக சிறப்பு இருக்கைகள் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு கேலரி மற்றும் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: