காஷ்மீரில் சகஜநிலை திரும்பியதாக கூறிவிட்டு 36 அமைச்சர்களை அனுப்புவது ஏன்? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: ‘காஷ்மீரில் சகஜநிலை திரும்பி விட்டதாக கூறும் மத்திய அரசு, அங்கு 36 அமைச்சர்கள் கொண்ட குழுக்களை அனுப்புவது ஏன்?’ என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதையடுத்து, அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், நாளை முதல்  வரும் 24ம் தேதி வரை இந்த யூனியன் பிரதேசங்களில் சுற்றுப் பயணம் செய்து, சிறப்பு அதிகாரம் ரத்து தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த 36 மத்திய அமைச்சர்களை அங்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

காஷ்மீரில் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து 2 வது முறையாக மத்திய அமைச்சர்கள் நாளை அங்கு பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `காஷ்மீரில் சகஜநிலை திரும்பி விட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். அப்படி என்றால் அவர் ஏன் காஷ்மீருக்கு 36 மத்திய அமைச்சர்கள் கொண்ட குழுவை அனுப்புகிறார்? காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு உள்ள நிலமையை அறிய சென்ற மற்ற கட்சி குழுக்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது ஏன்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: