சொல்லிட்டாங்க...

* நான் கட்சிக்கு மட்டும் தலைவர் அல்ல. கட்சியினரின் சிரமங்களை எடுத்துச் சொல்லவில்லை என்றால் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக கேரள அரசு என்னிடம் தெரிவிக்காமல் வழக்கு தொடர்ந்தது நெறிமுறை மீறிய செயல். நான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அல்ல. கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான்

* புதுவையில் ஒருபோதும் ஆட்சியை கலைப்பது போன்ற வேலைகளில் பாஜ ஈடுபடாது. - மத்திய அமைச்சர் பிரகலாத் சிங்

* மக்களவையில் பாஜவுக்கு 300 உறுப்பினர்கள் பலமுள்ளது என்பதற்காக, குறைவான உறுப்பினர் வைத்துள்ள காங்கிரஸ் பயந்து விடாது. - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

Tags : Told
× RELATED சொல்லிட்டாங்க...