2019ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் அறிவிப்பு கோஹ்லிக்கு ‘ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’: சிறந்த ‘ஒன்டே’ வீரர் ரோஹித் ஷர்மா

துபாய்: 2019ம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விருதுகள் மற்றும் அணிகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆண்டின் சிறந்த வீரருக்கான ‘சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ்’ விருதை பெற்றார். 23 இன்னிங்சில் 59 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் சிறந்த ‘டெஸ்ட் கிரிக்கெட் வீரராக’ தேர்வு செய்யப்பட்டார். 2019ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளும்  அறிவிக்கப்பட்டன. இதில், இந்திய கேப்டன் விராட் கோஹ்லி இரு அணிகளின்  கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி 2019 டெஸ்ட் அணியில், மயங்க்  அகர்வால், டாம் லாதம், மார்னஸ் லாம்பஷே, விராட் கோஹ்லி (கேப்டன்), ஸ்டீவ்  ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், பி.ஜே.வாட்லிங், பேட் கம்மின்ஸ், மிட்செல்  ஸ்டார்க், நீல் வேக்னர், நாதன் லயன் ஆகியோர் விருது பட்டியலில் உள்ளனர்.

ஐசிசி 2019 ஒருநாள் அணியில்,  ரோஹித் ஷர்மா, ஜானி பேர்ஸ்டோ, விராட் கோஹ்லி (கேப்டன்), ஜோ ரூட், ஜாஸ்  பட்லர், ராஸ் டெய்லர், பென் ஸ்டோக்ஸ், முஸ்தாஃபிஸுர் ரஹ்மான், ரஷித் கான்,  குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோரும் விருது பட்டியலில் உள்ளனர். சிறந்த ஒருநாள் போட்டி வீரராக ரோஹித் ஷர்மா (28 ஒருநாள் போட்டிகளில் 1,490 ரன்கள், சராசரி 57.30) இடம்பெற்றுள்ளார். ‘ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ (சிறந்த உத்வேகம், உற்சாகம், மனஉறுதி) என்ற பட்டியலில் விராட் கோஹ்லி உள்ளார். பந்தை சேதப்படுத்தியதற்காக ஓராண்டு இடைநீக்கம் செய்த பின்னர்  கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை  உற்சாகப்படுத்தும்படி ரசிகர்களை கேட்டுக்கொண்டதற்காக வழங்கப்படுகிறது. எமர்ஜிங் வீரராக மார்னஸ் லாம்பஷே (10 டெஸ்ட் போட்டிகளில் 1,022 ரன்கள், சராசரி 68.13), டி20-யில் சிறந்த பங்களிப்பு பட்டியலில் தீபக் சஹர் (வங்கதேசத்துக்கு எதிராக ஹாட்ரிக் உடன் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது). சிறந்த நடுவராக ரிச்சர்ட் இல்லிங்வொர்த், அசோசியேட் நாடுகளின் சிறந்த வீரராக கைலி கொய்ட்சர் ேதர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: