ஆஸ்கர் விருதுக்கு 11 பிரிவில் ‘ஜோக்கர்’ போட்டி

லாஸ்ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுக்கு 11 பிரிவுகளில் ஜோக்கர் ஹாலிவுட் படம் போட்டியிடுகிறது. 92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா  பிப்ரவரி 10ம் தேதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. விழாவில் விருதுக்கான படங்களின் பரிந்துரை  பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், டாட் பிலிப்ஸ் இயக்கத்தில், ஜோக்குயின்  போனிக்ஸ் நடிப்பில் வெளியான ஜோக்கர் படம் அதிகபட்சமாக 11  ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த தழுவல்  திரைக்கதை உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் ஜோக்கர் திரைப்படம்  பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தி ஐரிஷ்மேன், ஒன்ஸ்  அப் ஆன் எ டைம் இன் ஹாலிவுட், 1917 ஆகிய படங்கள் 10 ஆஸ்கர் விருதுகளுக்கு போட்டியில் உள்ளன.  மேரேஜ் ஸ்டோரி, பாராசைட், லிட்டில் உமன், ஜோஜோ ரேபிட் ஆகிய படங்கள் தலா 6 பிரிவுகளில் போட்டியிடுகின்றன.

Related Stories: