×

முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அணிக்கு 256 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 256 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 1.30 மணிக்கு தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா பேட்டிங் செய்தது. இறுதியில் 49.1 ஓவர்களில் இந்திய அணி அனைத்து  விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து 256 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 74 ரன்களும், ராகுல் 47 ரன்களும், ரிஷப் பந்த் 28 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் 3, கம்மின்ஸ், ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


Tags : India ,ODI Cricket ,match ,Australia ,First One Day Cricket Match , First One Day,Cricket match,India beat,Australia,256 runs
× RELATED சிட்னியில் முதல் ஒரு நாள் போட்டி;...