×

சிஏஏ, என்ஆர்சி விவகாரத்தில் தமிழகத்தில் எந்த சிறுபான்மை மக்களும் அச்சப்பட வேண்டியதில்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி, இதனை தெரிவித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற்றது என்று குறிப்பிட்ட அவர், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்று கூறினார். உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற்றது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது, ஆனால் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கிறார்கள் என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது,சிஏஏ, என்ஆர்சி விவகாரத்தில் தமிழகத்தில் எந்த சிறுபான்மை மக்களும் அச்சப்பட வேண்டியதில்லை என கூறினார். குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்ஆட்சி மொழிக்குழு ஆய்வு செய்ய வருவதாக எந்த தகவலும் வரவில்லை என கூறினார். கூட்டணியை பொறுத்தவரை சில இடங்களில் விட்டுத்தர வேண்டிய சூழ்நிலை உருவாகிறது என தெரிவித்தார். எங்களைப் பொறுத்தவரை மக்கள் தான் எஜமானர்கள், நீதிபதிகள்; அவர்கள் எண்ணப்படி ஆட்சி நடைபெறும் என கூறினார்.

Tags : Minority ,NRC ,Edappadi Palanisamy CAA ,Tamil Nadu ,Chief Minister , CAA, NRC, No Minority , Afraid ,Tamil Nadu
× RELATED பா.ஜ.க-வால் தான் சிறுபான்மை ஓட்டுக்களை...