×

திமுகவும் காங்கிரசும் இணைந்த கரங்கள் என்று கே.எஸ்.அழகிரி கூறிய நிலையில், காலம் தான் பதில் சொல்லும் என டி.ஆர்.பாலு கருத்து

சென்னை : திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறிய நிலையில், அது பற்றி காலம் தான் பதில் சொல்லும் என்று டி.ஆர்.பாலு கூறியிருக்கிறார். டெல்லி சென்றுள்ள கே.எஸ். அழகிரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக கூட்டணி குறித்து சோனியாகாந்தியுடன் ஆலோசித்ததாகவும் திமுக உடனான கூட்டணி தொடரும் என்று கூறியதாகவும் அழகிரி தெரிவித்தார். மேலும் இணைந்த கரங்களாக இருக்கும் திமுகவும் - காங்கிரசும் பிரிய வாய்ப்பில்லை என்றும் திமுக காங்கிரஸ் உடனான உறவு உள்ளாட்சித் தேர்தலால் பாதிக்காது என்றும் அழகிரி குறிப்பிட்டு உள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நேற்று காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது பற்றி டி.ஆர்.பாலுவிடம் தான் கேட்க வேண்டும் என்று அழகிரி கூறினார். இதையடுத்து காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து காலம் தான் பதில் சொல்லும் என்று திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.  அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை என ஸ்டாலின் மீது குற்றம் சாட்டியதால், காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்றார். அறிக்கையை தவிர்த்திருக்கலாம் என்று கூறிய பாலு, காங்கிரஸ் அறிக்கை குறித்து திமுக தொண்டர்கள் வருத்தமடைந்ததையும் குறிப்பிட்டார்.


Tags : DMK ,Congress ,KS Alagiri ,TR Balu , DMK, Congress, KS. Allagiri, DR Baloo, Sonia Gandhi, Stalin
× RELATED தேர்தலுக்கு பிறகு எங்கே பாஜ? என்று...