×

மதுரை பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை

மதுரை: மதுரையில் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என வந்த மிரட்டலை அடுத்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், மதுரையில் உள்ள பேருந்து நிலையங்களில் இன்று காலையில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார்.

இதையடுத்து மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் உத்தரவின் பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலைய பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அதிகாலை முதல் காலை 10 மணி வரை நடந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் சிறப்பு காவல் ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், தீவிரவாத தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், மர்ம நபரின் வெடிகுண்டு மிரட்டல் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : bus stations ,Madurai , Bomb threat
× RELATED பெசன்ட் நகரில் உள்ள நடிகர் விக்ரமின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்