×

சிசிடிவி காட்சிகளை உடனடியாக டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் : ஜேஎன்யூ நிர்வாகத்திற்கு உத்தரவு

டெல்லி: சிசிடிவி காட்சிகளை உடனடியாக டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று
ஜேஎன்யூ நிர்வாகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் சாட்சிகளுக்கு சம்மன் அளிக்க டெல்லி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மோதலில் தொடர்புடையோர் பயன்படுத்திய வாட்ஸ்-அப் குழு உள்ள போன்களை பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை தொடர்பான சமூக வலைதள பதிவுகளை பாதுகாக்க கோரிய வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் பல ஆணைகளை இன்று பிறப்பித்துள்ளது.

வழக்கின் பின்னணி

*மூன்று ஜே.என்.யூ பேராசிரியர்கள் - அமீத் பரமேஸ்வரன், சுக்லா சாவந்த் மற்றும் அதுல் சூத் ஆகியோர் டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) ஜனவரி 5-ல் நடந்த வன்முறை தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள், வாட்ஸ்அப் செய்திகள், தொடர்புடைய பதிவுகள் மற்றும் தகவல்கள் உள்ளிட்ட தரவுகளைப் பாதுகாக்கக் கோரி மனுதாக்கல் செய்தனர்.

 *இந்த விவகாரத்தில் டெல்லி போலீஸ் கமிஷனர் மற்றும் டெல்லி அரசாங்கத்திற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் தங்கள் மனுவில் கோரியிருந்தனர்.

*பேராசிரியர்கள் :மூன்று பேரும் வாட்ஸ்அப் குழுக்களில் இடதுசாரிக்கு எதிரான ஒற்றுமை மற்றும் ஆர்.எஸ்.எஸ் நண்பர்கள் ஆகிய குழுக்களின் தரவை மீட்டெடுக்கவும் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

*ஜே.என்.யுவில் நடந்த வன்முறை தொடர்பாக அங்கு படிக்கும் மாணவர்களின் செய்திகள், படங்கள், வீடியோக்கள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவை அந்த டேட்டாவில் இடம்பெற்றுள்ளளது.  

*அவற்றை பாதுகாக்க கோரிய வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் பதில் அளித்த டெல்லி போலீசார், ஜேஎன்யு பல்கலைக்கழகம் உள்பட 1,000 ஏக்கர் வளாகத்தில் நிறுவப்பட்ட 135 சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை அவர்கள் கோரியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

*இதையடுத்து இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் வாட்ஸ்அப், கூகிள், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

*இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

*அப்போது, ஜேஎன்யு பல்கலைக்கழக வன்முறை தொடர்பான சிசிடிவி காட்சிகளை உடனடியாக டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

*மேலும், சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும், மோதலில் தொடர்புடையோர் பயன்படுத்திய வாட்ஸ்-அப் குழு உறுப்பினர்களின் போன்களை பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.

* கூகுள், வாட்ஸ்அப் நிறுவனங்கள் தங்கள் நிறுவன கொள்கையின்படி, வாடிக்கையாளர்களின் இ-மெயில் முகவரி உள்ளிட்ட அடிப்படை தகவல்களை பாதுகாக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.


Tags : JNU ,Delhi Police ,administration ,management , CCTV, Scene, JNU, Delhi Police, High Court
× RELATED உலக தரவரிசை வெளியீடு இந்தியாவின் சிறந்த பல்கலை. ஜேஎன்யு