×

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு... சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு 2019ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது

சென்னை: சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு 2019ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் விருதுடன் ரூ.5 லட்சம், நினைவுப்பரிசு, பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றியோருக்கு தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும். இந்நிலையில் 2019ஆம் ஆண்டிற்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக வளர்ச்சித் துறை சார்பில் விருதுகளுடன் ரூ.1 லட்சம் பணமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் பட்டியல் பின்வருமாறு...  

தமிழ்த்தாய் விருது - சிகாகோ தமிழ்ச்சங்கம்
கபிலர் விருது-புலவர் வெற்றியழகன்,
உ.வே.சா.விருது-வே.மகாதேவன்,
கம்பர் விருது-சரசுவதி ராமநாதன்
சொல்லின் செல்வர் விருது - முனைவர் கவிதாசன்
ஜி.யு.போப் விருது - மரிய ஜோசப் சேவியர்
மறைமலை அடிகளார் விருது - முத்துக்குமாரசாமி
முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது - நாகராசன்
அம்மா இலக்கிய விருது - உமையாள் முத்து
மொழி பெயர்ப்பாளர் விருது - மாலன்
இளங்கோவடிகள் விருது - கவிக்கோ ஞானச் செல்வன்(எ) திருஞானசம்பந்தம்  
உமறுப்புலவர் விருது -லியாகத் அலிகான்  
மொழியியல் விருது - இலங்கை முனைவர் சுபதினி ரமேஷு
சிங்காரவேலன் விருது - அசோகா சுப்பிரமணியன்
அயோத்திதாஸப் பண்டிதர் விருது - புலவர் பிரபாகரன்


Tags : Tamil Nadu Govt Announces Tamil Growth Awards ,Chicago Govt Announces Tamil Growth Awards , Chicago, Tamil Nadu, Award, GU Bob Award, Ilangovadi
× RELATED கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம்...