சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 144 ரூபாய் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. புத்தாண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி நகை வாங்க அதிகம் செலவிட வேண்டியிருக்கிறதே என்ற கவலையில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நற்செய்தியாக இன்று தங்கம் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.