5 ஆண்டில் இல்லாத அளவுக்கு பண வீக்கம் கிடுகிடு உயர்வு

புதுடெல்லி: சில்லறை விலை பண வீக்க விகிதம், 5ஆண்டில் இல்லாத அளவுக்கு கடந்த டிசம்பரில் 7.35 சதவீதத்தை எட்டியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துக்கான பண வீக்க விகிதத்தை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.  இதன்படி, கடந்த டிசம்பர் மாதத்தில் சில்லறை விலை பண வீக்கம் 7.35 சதவீதமாக உள்ளது. இது கடந்த நவம்பரில் 5.54 சதவீதமாகவும், 2018 டிசம்பரில் 2.11 சதவீதமாகவும் இருந்தது. இதற்கு உணவு பொருட்கள் விலை அதிகரித்ததே முக்கிய காரணம். உணவு பொருட்கள் விலை பண வீக்கம் கடந்த நவம்பரில் 10.01 சதவீதமாக இருந்தது, கடந்த டிசம்பரில் 14.12 சதவீதமாக உயர்ந்துள்ளது.  சில்லறை விலை பண வீக்கம் நடப்பு நிதியாண்டில் 4 சதவீதமாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி இலக்கையும் தாண்டி பண வீக்கம் அதிகரித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: