சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடு பன்மடங்கு அதிகரித்ததை அடுத்து ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. புத்தாண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி நகை வாங்க அதிகம் செலவிட வேண்டியிருக்கிறதே என்ற கவலையில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நற்செய்தியாக இன்று தங்கம் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.