பாலித்தீன் சூட்!

நன்றி குங்குமம் முத்தாரம்

பிளாஸ்டிக் தடைக்கு முன் மளிகைப் பொருட்களை வாங்க பாலித்தீன் பைகளைத்தான் அதிகமாக பயன்படுத்தி வந்தோம். பொருட்

களை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தவுடன் அந்தப் பாலித்தீன் பைகளை அப்படியே குப்பையில் போட்டு விடுவோம்.

இல்லை தூர வீசிவிடுவோம். ஆனால்,மேற்கு நியூயார்க்கில் வசித்து வரும் ரோஸா ஃபெரினோ அப்படிச் செய்யவில்லை. தூக்கி வீசப் பட்ட 300 பாலித்தீன் பைகளைச் சேகரித்து ஒரு கோட்டை தைத்துவிட்டார்!

75 வயதான ரோஸா தொலைக்காட்சி பார்ப்பதில்லை. குளிர்காலத்தில் நேரம் மெதுவாக சென்றிருக்கிறது. பொழுதுபோக்கிற்க்காக ஏதாவது செய்யலாமே என்ற யோசனையில் உதயமானது தான் பாலித்தீன் சூட்டிற்கான ஐடியா.

இப்போது அந்த பாலித்தீன் சூட் ‘வெக்மேன்’ என்ற பிரபல சூப்பர்மார்க்கெட்டின் பிரமாண்ட கடையின் முன்னால் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாலித்தீன் பைகளை மறுசுழற்சி செய்தது, அதிலிருந்து நூலை எடுத்து கோட் தைத்தது என எல்லா விவரங்களையும் வீடியோவாக ரோஸா இணையத்தில் பதிவிட, வைரலாகிவிட்டது அந்த பாலித்தீன் சூட்.

Related Stories: