வெள்ளை மணல் கடற்கரை!

நன்றி குங்குமம்

கண் புருவத்தை உயர்த்தி ‘வாவ்’ என்று சொல்ல வைக்கிறது ஆஸ்திரேலியாவின் விட்சண்டே தீவை அலங்கரிக்கும் வைட்ஹெவன் கடற்கரை.

படகு, ஹெலிகாப்டர், கடல் விமானம் மூலமாகத்தான் இங்கே வர முடியும். பளீர் என கண்களில் மின்னும் வெள்ளை மணல் இதன் ஸ்பெஷல்.

98% சிலிக்கா கலந்த இந்த மணல் இரவு நேரத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பைப் போல ஒளிர்கிறது. 7 கிலோமீட்டர் தூரம் பரந்து விரிந்திருக்கும் இந்த மணற்பரப்பை விமானத்தில் இருந்து தரிசிப்பது தனி அனுபவம்.  

தவிர, நீலமும் பச்சையும் கலந்த வண்ணத்தில் இருக்கும் கடல் நீர் கொள்ளை அழகு. தூய்மையான கடற்கரை, அழகான கடற்கரை என பல விருதுகளை அள்ளியிருக்கிறது. இங்கே நாய்களுக்கு அனுமதியில்லை. புகைபிடிக்கக்கூடாது. சுற்றுலாப் பயணிகளையும் குறைந்த அளவே அனுமதிக்கிறார்கள். கடுமையான வெப்ப காலத்தில் கூட வெறுங்காலில் நடக்கலாம். இந்த சிலிக்கா மணல் சுடுவதில்லை.

த.சக்திவேல்

Related Stories: