உலகின் முதல் காட்டு நகரம்!

நன்றி குங்குமம்

தென்சீனாவில் உள்ள குவாங்ஷி மலைப்பகுதிகளில் வீற்றிருக்கும் லைசௌ நகரத்தில் அமையப்போகும் இதுதான் உலகின் முதல் காட்டு நகரம்.

175 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரியப்போகும் இந்த நகரத்தின் கட்டமைப்பு முடிந்துவிட்டால் சுமார் 30 ஆயிரம் பேர் இங்கே வசிக்கலாம். வீடு, ஹோட்டல், அலுவலகம், மருத்துவமனை, பள்ளி என அனைத்து வகையான கட்டடங்களும் மரங்கள் சூழ்ந்திருக்கும்.

அதாவது வீட்டின் பால்கனி, மொட்டை மாடி என எல்லா இடங்களிலும் மரங்களை வைப்பார்கள். 100 வகையான 10 லட்சம் மரங்கள் இந்நகரத்தை அலங்கரிக்கப் போகின்றன. இந்த மரங்கள் வருடத்துக்கு 10 ஆயிரம் டன் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி 900 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். 2020ல் இந்நகரத்தின் கட்டுமானப் பணி ஆரம்பமாகிறது.

த.சக்திவேல்

Related Stories: