×

சிரஞ்சீவிகளின் தேசம்

நன்றி குங்குமம் முத்தாரம்

ஜப்பானின் முக்கிய தீவு ஒகினாவா. 106 கிலோமீட்டர் நீளமும், 11 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட இந்தத் தீவில் 13 லட்சம் பேர் வசிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் விரும்பும் ஓர் இடமாக ஒகினாவா திகழ்ந்தாலும் அதனுடைய சிறப்பு தனி ரகம். ஆம்; 100 வயதுக்கு மேலானவர்கள் அதிகமாக வாழும் ஓர் இடம் ஒகினாவா. அதனால் இதனை சிரஞ்சீவி தீவு என்று அழைக்கின்றனர்.

உலகிலேயே புற்றுநோய் தாக்கம் குறைவாக உள்ள இடம் ஒகினாவாதான். தவிர, வயதானவர்களை இயல்பாக தாக்கக்கூடிய இதய நோய், ஞாபக மறதி உட்பட பல நோய்களுக்கு இந்தத் தீவில் இடமில்லை. இந்த பூமியில் அதிக நாட்கள் வாழக்கூடிய பெண்கள் இங்கு தான் இருக்கின்றனர். ‘‘என் கணவர் 101 வயதில் இறந்துவிட்டார். இப்போது எனக்கு 97 வயது. எனது பேரக்குழந்தைகளுடனும், கொள்ளுப்பேத்திகளுடனும் இருப்பதால் ரொம்பவே ஆரோக்கியமாக இருக்கிறேன்...’’ என்கிறார் ஒகினாவாவைச் சேர்ந்த ஒரு பெண்.

Tags : Land of Chiranjeevi , Japan, Okinawa Island, the nation of Chiranjeevi
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...