முத்தான மூன்று தீவுகள்

நன்றி குங்குமம் முத்தாரம்

இந்தோனேஷியாவின் பாலி பகுதிக்கு சுற்றுலா செல்பவர்கள், மறக்காமல் பயணிக்க வேண்டியது கிலி தீவுகள். முத்தான மூன்று தீவுகளை உள்ளடக்கிய சிறு தீவுக்கூட்டம் இது. கிலி டிராவெஞ்சன் அழகிய வெள்ளை மணல் கடற்கரைகளையும், சுத்தமான நீரையும், ஏராளமான பனைமரங்களையும் கொண்ட பகுதி இது. இங்கு கடலில் மூழ்கிக்கடக்கும் ஒரு கைவிடப்பட்ட கப்பலைக் காணலாம். இதற்கு வாயில் ஒரு டியூபை அணிந்துகொண்டு, அதன்மூலம் மூச்சு விட்டபடி, தண்ணீருக்குள் நீந்தி பயணிக்க வேண்டும். இந்த சாகசத்துக்கு கிலி டிராவெஞ்சன் மிக வசதியானது.

கிலி மெனோ

இங்கே கடல் ஆமை பாயிண்ட்  ஒன்று உள்ளது. கடல் ஆமைகள் நம்மை அலட்சியம் செய்து நீந்திச் செல்வதைக் கண்குளிரக் காணலாம். இங்கும் ஸ்நார்கிலிங் (தண்ணீருக்குள் செய்யும் ஒரு சாகச விளையாட்டு) செய்யலாம். ஆமைகளுடன்  பயணிக்கலாம்.

கிலி ஏர்

கடற்கரையை ஒட்டியே நிறைய பவளப்பாறைகளை நாம் பார்க்கலாம். ஸ்கூபா டைவிங்குக்கு பேர் போன இடம் இது. பாலி பகுதியிலிருந்து சுமார் 2½ மணி நேரத்தில் கிலி டிராவெஞ்சனை அடையலாம். இந்த மூன்று தீவுகளையும் நடந்தே பார்த்துவிடலாம். இதற்கு 4 மணிநேரம் ஆகும்.

Related Stories: