×

இயற்கையில் இதுவரை கண்டிராத புதிய வகை கனிமம் கண்டுபிடிப்பு

விஞ்ஞானிகள் முதன் முறையாக கனிமப்பொருள் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர். இதனை விஞ்ஞானிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். இக்கனிமப்பொருளை இயற்கையில் இதற்கு முன்னர் கண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பின்தங்கிய கிராமத்திலுள்ள வீதியோரத்திலிருந்து இக்கனிமப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

1951 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இப்பொருளானது இதுவரை காலமும் விக்டோரியாவிலுள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே தற்போது இதுவரை கண்டறியப்படாத புதிய வகை கனிமத்தினை அப்பொருள் கொண்டிருக்கின்றமை உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது விண்ணில் இருந்து வீழ்ந்த விண்கல்லாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Tags : Natural, new type of mineral, invention
× RELATED 21ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி பேரணி;...