8 வயதில் கோடீஸ்வரர்!

நன்றி குங்குமம் முத்தாரம்

இந்த வருடத்தில் யூடியூப் சேனல் மூலமாக அதிக வருமானம் ஈட்டியவர்களின் பட்டியல்களை ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த பொம்மைகள் விமர்சகரான ரியான் 26 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளார். இத்தனைக்கும் ரியானின் வயது 8 தான். கடந்த வருடம் ரியானின் வருமானம்  22 மில்லியன் டாலர். 2015-இல் ரியான் தொடங்கிய  ‘ரியான் டாய்ஸ்  ரிவ்யூ’ எனும் யூடியூப் சேனலுக்கு கோடிக்கணக்கான பார்வையாளர்கள்.

டெக்சாஸ் நகரில் பெற்றோர் மற்றும் இரட்டைச் சகோதரிகளுடன் வசித்து வரும் ரியான், தனது 22.9 மில்லியன் சந்தாதாரர்களுக்கு தினமும் ஒரு வீடியோவை யூடியூப்பில் வெளியிடுகிறார். சில வீடியோக்கள் 100 கோடிக்கும் அதிகமான முறையில் பார்வையிடப்பட்டுள்ளது. இதில் விளம்பர நிறுவனங்கள் போட்டிபோட்டு ரியானின் சேனலில் விளம்பரத்தை ஒளிபரப்ப வரிசையில் காத்திருக்கின்றன. இதனால் வருமான மழை ரியானின் மீது பொழிகிறது.

Related Stories: