இந்த வாழைப்பழத்தின் விலை ரூ.85 லட்சம்!

நன்றி குங்குமம் முத்தாரம்

வித்தியாசமான படைப்புகளுக்குச் சொந்தக்காரர் மரிஷியோ கேட்டலன். சமீபத்தில் அமெரிக்காவின் மியாமி நகரில் கலைப்பொருட்களுக்கான கண்காட்சி ஒரு ஹோட்டலில் நடந்தது. அந்த ஹோட்டல் அறைச் சுவரில் வாழைப்பழத்தை டேப்பைக் கொண்டு ஒட்டிவைத்தார். இப்படி ஒட்டி வைத்ததையே கலைப்படைப்பாக மாற்றி அதற்கு ‘காமெடியன்’ என்று பெயர் வைத்தார். அந்த வாழைப்பழம் 85 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. ‘‘வாழைப்பழத்தின் பெயர் காமெடியன் இல்லை.

அதை வாங்கு பவன்தான் காமெடியன்...’’ என்றும், ‘‘ஆஹா... எவ்வளவு அற்புதமான படைப்பு...’’ என்றும் கேட்டலனை இணையத்தில் புகழ்ந்தும் இகழ்ந்தும் வந்தனர். கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்கள் வாழைப்பழத்துடன் தான் அதிகமாக செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அமெரிக்காவின் பிரபல கலைஞர் டேவிட் டதுனா  கண்காட்சிக்கு வந்ததோடு, பசிக்கிறது என்று அந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டும் விட்டார்.

Related Stories: