மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கார் முதன்மையான தேர்வாக இருக்கிறது. தற்போது ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் மாடல் மட்டும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வந்துள்ளது. இந்த காரில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 117 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த கார், எஸ்வி, வி, விஎக்ஸ், இசட்எக்ஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. அதேநேரத்தில், பிஎஸ்-6 டீசல் மாடல், வரும் ஏப்ரல் மாதத்தையொட்டி விற்பனைக்கு கொண்டுவரப்படும் என ஹோண்டா அறிவித்துள்ளது. பிஎஸ்-4 மாடல் தொடர்ந்து சில மாதங்கள் விற்பனையில் இருக்கும் நிலையில் விலை ₹5,000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ளடீசல் மாடலில் 1.5 லிட்டர் ஐடிடெக் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன்கொண்டது. இந்த இன்ஜின், ஒரு சில மாதங்களில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக கிடைக்கும்.