நகரமாகும் இந்தியா

நன்றி குங்குமம் முத்தாரம்

ஒரு காலத்தில் இந்தியாவின் அடையாளமே கிராமங்கள்தான். இனி அப்படிச் சொல்ல முடியாது என்று ஆணித்தரமாக சொல்லியிருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. ‘‘இன்னும் 30 வருடங்களில் இந்தியர்களில் 60 சதவீதம் பேர் நகரத்தில் வசிக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்...’’ என்ற அதிர்ச்சி புள்ளிவிவரத்தைக் கொடுத்திருக்கிறது ஐ.நா சபையின் ஓர் அறிக்கை.

‘‘இந்தியாவில் நகர வளர்ச்சிக்காக 3 திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், அந்த திட்டங்களுக்கு இன்றளவும் ஒதுக்கிய நிதி வெறும் 7 - 20 சதவீதம்தான்...’’ என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்கள் இந்தியப் பொருளாதார வல்லுநர்கள்.‘‘கிராமங்களின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்து வதுதான் இன்றைய தேவை...’’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Related Stories: