×

உண்பதற்கு முன் கைகளை கழுவுவது அவசியம்: துல்லியமாக எடுத்துக்காட்டிய பரிசோதனை முடிவு

உணவு உண்பதற்கு முன்னர் கைகளை கழுவுவது அவசியம் என காலம் காலமாக எடுத்துரைக்கப்படும் அறிவுரையாகும். எனினும் சிறுவர்கள் இதனை முறையாக பின்பற்றுவதில்லை. இப்படியிருக்கையில் கைகளை கழுவாது உணவை தொடுவதால் ஏற்படும் ஆபத்து சிறிய பரிசோதனையின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

இதில் சவர்க்காரம் இட்டு கழுவிய கையினால் தொடப்பட்ட பாண் மற்றும் கையினை கழுவாது தொடப்பட்ட பாண் என்பவற்றில் ஏற்படும் மாற்றங்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி கழுவாத கையினால் தொடப்பட்ட பாணில் அதிக அளவு பூஞ்சணங்கள் படர்ந்திருந்தன. Dayna Robertson எனும் டிஸ்கவரி தொடக்கப்பள்ளி ஆசிரியரே இந்த பரிசோதனையை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Wash, wash, and wash before eating
× RELATED தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில...