×

ஆதரவாக 229 பேரும் எதிராக 194 பேரும் வாக்களிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கும் முதல் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் இப்போதைய அதிபர்  டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார். அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக, ஜோ பிடெனின் மகன் உக்ரைன் எரிவாயு  நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பை பற்றி விசாரணை நடத்துமாறு, உக்ரைன் அதிபர் விளாடிமர் ஜெலன்ஸ்கிடம் டிரம்ப் வலியுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் டிரம்ப் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், அவர் அதிபர் பதவியில் இருப்பதற்கு தகுதியவற்றவர் என்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி குற்றஞ்சாட்டியது. மேலும், அதிபருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு  அவைகளிலும் கண்டனத் தீர்மானம் கொண்டு வரும் நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்கு நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் அனுமதி அளித்துள்ளனர். இதைத்தொடர்து, முதல்கட்டமாக பிரதிநிதிகள்  சபையில் இன்று கண்டனத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

டிரம்ப்பை பதவியில் இருந்து நீக்குவதற்காக கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவாக 229 உறுப்பினர்களும் எதிராக 194 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். எனவே கண்டனத் தீர்மானம் நிறைவேறியது. கண்டனத் தீர்மானம் செனட் சபையிலும்  நிறைவேறினால் மட்டுமே, அதிபர் டிரம்பை பதவியில் இருந்து நீக்க முடியும். ஆனால் 100 இடங்களைக் கொண்ட செனட்டில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 53 எம்.பி.க்களுடன் பெரும்பான்மை உள்ளதால், அவரது பதவி தப்ப வாய்ப்புகள் அதிகம்  என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் ரிச்சர்டு நிக்சன்:

இதற்கு முன்பு, 1974ல் வாட்டர்கேட் ஊழல் விவகாரத்தில் அதிபர் ரிச்சர்டு நிக்சன் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படும் சூழலில் அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் 1868ல் அதிபர் ஆன்ட்ரூ ஜான்சன் மீதும், 1998ல் பில்  கிளின்டன் மீதும் கண்டனத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டாலும் அவை செனட்டில் தோற்கடிக்கப்பட்டன. தற்போது கண்டனத் தீர்மானத்தை டிரம்ப் எதிர்க்கொள்கிறார்.

Tags : Trump ,US ,ouster ,229 , 229 voted in favor, 194 voted in favor: First resolution to oust US President Trump passed
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...