சிறுதொழில் தொடங்க ஏழை பெண்களுக்கு கடன் வழங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் : ராமதாஸ்

சென்னை: சிறுதொழில் தொடங்க ஏழை பெண்களுக்கு ரூ.50,000 வரை வங்கியில் கடன் வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நுண்டகன் என்ற பெயரில் மேற்கு மாவட்டங்களில் கந்துவட்டி கலாச்சாரத்தால் பலர் தற்கொலை செய்து கொள்வதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்கும் பெண்கள் கடன் வலையிலிருந்து மீள முடியாமல் சிக்கிக் கொள்வதாகவும், கடன் கொடுத்தவர்கள் சுடு சொற்கள் வீச, சொத்துக்களை பறித்து பாலியல் அத்துமீறலிலும் ஈடுபடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: