ஜனநாயக திருவிழாவில் பங்கேற்க வரும்படி அனைத்து வாக்காளர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் சட்டசபைக்கான 4-வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்க வரும்படி அனைத்து வாக்காளர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.  முதல் கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக 20 தொகுதிகளுக்கும், 3வது கட்டமாக 17 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்துள்ளது.  வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.  இதனை அடுத்து, ஜார்க்கண்ட் சட்டசபைக்கான 4வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.  இதற்காக வாக்கு சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.  

வாக்கு இயந்திரங்களை அதிகாரிகள் முறைப்படி சரிபார்த்தனர். இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.  வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்கு சாவடிக்கு வந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜார்க்கண்ட் சட்டசபைக்கான 4வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.  இந்த ஜனநாயக திருவிழாவில் அனைத்து வாக்காளர்களும் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என உங்களை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags : voters ,Modi ,festival , PM Modi,invites,voters, attend,democratic festival
× RELATED திருச்செங்கோட்டில் வாக்காளர்களுக்கு எம்பி நன்றி அறிவிப்பு