×

புறநகரில் தொடர் கைவரிசை பிரபல கொள்ளையன் கைது

தாம்பரம்: தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, சீனிவாச நகரில் வசித்துவரும் மணிகண்டன் (32) என்பவர் வீட்டின் பூட்ைட உடைத்து, கடந்த 6ம் தேதி 6 சவரன் தங்க நகை, 1.5 லட்சம் ஆகியவை கொள்ளை போனது. இதுகுறித்து புகாரின் பேரில் பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பீர்க்கன்காரணை, வேல் நகர் பஸ் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் நின்ற வாலிபரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்ததில், சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த மகபுல் பாட்சா (21) என்பதம், இவர்தான் மணிகண்டன் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

இதேபோல், சேலையூரில் ஒரு வீட்டில் மூன்றரை சவரன், பீர்க்கன்காரணையில் ஒரு வீட்டில் 2 சவரன், சிட்லப்பாக்கத்தில் ஒரு வீட்டில் 2 சவரன் ஆகியவற்றை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 12 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மகபுல் பாட்சாவை, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : robber ,robbery ,rapist ,suburbs , suburbs, serial rapist, famous pirate, arrested
× RELATED ஈரோட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது