×

கூலி வேலை செய்வது போல் தொடர் ஆட்டோ திருட்டு பிரபல கொள்ளையன் கைது

சென்னை: சென்னை பெரியமேடு, நேவல் மருத்துவமனை சாலை, முதல் தெருவை சேர்ந்தவர் சந்தியா (30). சென்ட்ரல் பகுதிகளில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், கடந்த மாதம் 18ம் ேததி சவாரி முடிந்து தனது வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோ மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியா, சம்பவம் குறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.

அதில், சென்னை வால்டாக்ஸ் சாலை 3வது சந்து பகுதியை சேர்ந்த பாலாஜி (எ) லொடுக்கு பாலாஜி (35) என்பவர் ஆட்டோவை திருடியது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த லொடுக்கு பாலாஜியை ேநற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர், கூலி செய்வது போல் நோட்டமிட்டு, பல இடங்களில் ஆட்டோக்களை திருடியது தெரியவந்தது. அவரிடம் இருந்து ஒரு ஆட்டோ மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பாலாஜி மீது பூக்கடை, பெரியமேடு, எழும்பூர் காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : robber ,auto theft arrests ,celebrity robbery ,arrest , Working as a mercenary, serial auto theft, celebrity robbery, arrest
× RELATED ஈரோட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது