திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 1 லட்சம் மொய்ப்பணம் அபேஸ்: சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு

ஆவடி: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 1 லட்சம் மொய் பணத்தை அபேஸ் செய்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த மிட்னமல்லி பிராமின் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.  இவரது மனைவி கிரிஜா. இவர்களது மகன் சுதாகர் (25) என்பவருக்கு, நேற்று முன்தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, பட்டாபிராம் சிடிஎச் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்ததது. அப்போது மனமக்களை வாழ்த்தி உறவினர்கள்  மொய்ப்பணம் மற்று பரிசு பொருட்களை வழங்கினர்,  இதில் சுதாகருக்கு வந்த மொய்ப்பணத்தை உறவினர்கள் ஒரு கட்டைப்பையில் போட்டு, மேடையின் பின்புறம் வைத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, அந்த பணப்பை மாயமானது தெரிந்தது. அதில், சுமார் 1 லட்சம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிரிஜா அளித்த புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Tags : Wedding Reception, In Concert, 1 Lakh Position, Abbess
× RELATED சென்னை திருவேற்காட்டில் திருமண...