×

பைக்கில் கஞ்சா கடத்திய 2 மாணவர்கள் சிக்கினர்

சென்னை: ஆவடி - கோவில்பதாகை நெடுஞ்சாலை கன்னடப்பாளையம் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அவ்வழியே பைக்கில் வந்த 2 பேரை மடக்கி, சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவர்களை சோதனையிட்டனர். அப்போது, அவர்களிடம் இருந்த பையில் 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஆந்திராவை சேர்ந்த நல்ல சாய்க்குமார் (20), பவுல்ராஜ் (21) என்பதும், ஆவடி அடுத்த வெள்ளானூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருவதும் தெரிந்தது.

மேலும் விசாரணையில், நண்பர் ஒருவருக்கு ஆவடியில் இருந்து இவர்கள் கஞ்சா வாங்கிச் செல்வதாக கூறினர். அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அம்பத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பெருமாள் (40). பட்டாபிராம் பாபு நகரில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை செய்து வந்த இவர், நேற்று கடையின் பின்புறம் மர்மான முறையில் இறந்து கிடந்தார். சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். துரைப்பாக்கம் கண்ணகி நகர் அருகே உள்ள பல்லவன் குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் (36), செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த அல்போன்ஸ் (48) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
*புளியந்தோப்பு கன்னிகாபுரம் எம்.எஸ்.முத்துநகரை சேர்ந்த டிரைவர் வேலு (40), தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
*பொழிச்சலூர் டிடிகே நகர் வஜ்ரவேல் தெருவை சேர்ந்த மைக்கேல் (36) என்பவர், நேற்று வீட்டின் அருகே உள்ள கல்குவாரி குட்டையில் குளித்தபோது, நீரில் மூழ்கி இறந்தார்.
* அண்ணாநகர் வசந்த் காலனி 3வது தெருவில் உள்ள தனியார் கல்லூரி பூட்டை உடைத்து திருட முயன்ற, பாடி குப்பம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ராமு (22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* திருமங்கலத்தை சேர்ந்த 29 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, எர்ணாவூர், வள்ளுவர் நகர் 18வது தெருவை சேர்ந்த கமலக்கண்ணன் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* பாரிமுனை மூக்கர் நல்லமுத்து தெருவில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த பிரபா (எ) பிரபாகரன் (21), காசிமேடு சேர்ந்த மகேஷ் ((46), தண்டையார்பேட்டை சேர்ந்த முகமது யூசப் (21), முகமது அஸ்லாம் (21) மற்றும் திருநங்கை தீபா (எ) அருணாச்சலம் (23) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
*  கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற கண்ணகி நகரை சேர்ந்த மணிகண்டன் (24), நொச்சி குப்பத்தை சேர்ந்த செல்வா (20) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags : On bike, 2 students, trafficked in marijuana
× RELATED பைக் மோதி தொழிலாளி பலி