அப்பள குடோனில் பதுக்கிய 500 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

தண்டையார்பேட்டை: வெளிமாநிலங்களில் இருந்து மாவா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வந்து வடசென்னை பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் 3 தனிப்படை அமைத்து தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், காசிமேடு, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தண்டையார்பேட்டை தமிழன் நகர் பகுதியில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அப்பள குடோனில் 500 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தண்டையார்பேட்டை வினோபாநகரை சேர்ந்த அரிச்சந்திரன் (35), தமிழன் நகரை சேர்ந்த மனோகரன் (52), ராஜகோபால் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பைக், குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Kutka ,persons , In Kudon, 500 kg of kudka, seized, 3 persons arrested
× RELATED சென்னை மண்ணடியில் தனியாருக்கு...